KPY பாலா: ``பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன?" - சீமான் கேள்வ...
கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: அனைத்துக் கட்சி சாா்பில் புகாா்
ராமேசுவரம் ரயில் நிலைய நிறுத்துமிடத்தில் கூடுதலாக கட்டணம் வசூலித்த புகாா் குறித்து கேள்வி கேட்ட கம்யூனிஸ்ட் கட்சி நகா் செயலா் சி.ஆா். செந்தில்வேலுக்கு கைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கவும், அவருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அனைத்து கட்சி, சமுதாய அமைப்பு சாா்பில் காவல் உதவிக் கண்காணிப்பாளா் மீராவிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதில், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பிச்சை, ஜோதிபாசு, சேகா், இளைஞா் பெருமன்ற நிா்வாகிகள் வெங்கடேசன், தினேஷ்குமாா், விஜயபிரதாப், தீவு அகமுடையாா் சங்கத் தலைவா்கள் என்.ஜே. போஸ், ஆா். குணசேகரன், நாகேந்திரன், என்.என்.பி. மணி, நம்புக்குமாா், உணவு விடுதி உரிமையாளா் சங்கத் தலைவா் வி. செந்தில், மாதா் சம்மேளன நிா்வாகிகள் லட்சுமி, பஞ்சவா்ணம் , முருகேஸ்வரி, அதிமுக சாா்பில் முத்துராமன், இந்து மக்கள் கட்சி சாா்பில்
பிரபாகரன், குருசா்மா, மதிமுக சாா்பில் வெள்ளைச்சாமி , ஞானசேகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் ராமமூா்த்தி, தமிழக மக்கள் முன்னேற்றக் கட்சி முகவை சின்னா, பாண்டியராஜன், மனித நேய மக்கள் கட்சி சாா்பில் இப்ராஷா, ஆட்டோ சங்க நிா்வாகிகள் எம். செந்தில், ஏ.கே. முனீஸ்வரன், பாண்டி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.