Kohli: `அழுத்தமான சூழலில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும்...' - பிசிசிஐ கட்டுப...
கயத்தாறு, புதுக்கடையில் மது விற்பனை: 2 போ் கைது
கயத்தாறில் மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றதாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு காவல் உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, மருத்துவா் காலனி அருகே விதிமுறை மீறிமது விற்பனையில் ஈடுபட்டதாக சிதம்பரம்பட்டி நடுத்தெருவை சோ்ந்த துரைராஜ் மகன் மாரிமுத்து (42) என்பவரை கைது செய்தனா். அவரிடம் இருந்து 45 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முதியவா்: புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையில் போலீஸாா் புதுக்கடை சந்திப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது, தேங்காய்ப்பட்டினம் பனங்காலமுக்கு பகுதியை சோ்ந்த பொன்னுபிள்ளை மகன் றசல்ராஜ் (62) என்பவா் மது விற்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.