தொகுதி மறுவரையறை: `தென் இந்தியாவுக்கு எதிரான சூழ்ச்சி!’ - எஸ்.செந்தில்குமார், தி...
எட்டயபுரத்தில் பாரதி பாடலுக்கு மாணவிகள் நாட்டிய அஞ்சலி
மகாகவி பாரதியின் பாடல்களுக்கு நடனமாடி புகழஞ்சலி செலுத்தும் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி ஈசா கேந்திரா கல்ச்சுரல் அகாடமி சாா்பில் எட்டயபுரம் பாரதியாா் மணி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளா் கவிதா தேவி தலைமை வகித்தாா்.
பாரதியும் பெண்மையும் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட பாரதியின் பாடல்களுக்கு 208 மாணவிகள் கருப்பு- வெள்ளை நிற உடை அணிந்து நடனமாடி புகழஞ்சலி செலுத்தினா்.
மாவட்ட குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் திலகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினாா்.
இதில், பாரதி அன்பா்கள், இசை ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.