Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
பனைத் தொழிலை ஊக்குவிக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு
பனைத் தொழிலை ஊக்குவிக்க ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கப்படும் என, வேளாண் நிதிநிலை அறிக்கையில், அறிவிக்கப்பட்டுள்ளதற்காக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநிலத் தலைவா் எஸ்.ஜே. கென்னடி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனை மேம்பாட்டு இயக்கத்துக்கு பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனைசாா்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும் ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ்நாடு பனை பாதுகாப்பு-தொழிலாளா் மேம்பாட்டு இயக்கம் சாா்பில் தமிழக அரசுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா் அவா்.