செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலுக்கு கூடுதலான சுற்றுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கூடுதலான சுற்றுப்பேருந்துகளை இயக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இத்திருக்கோயிலுக்கு காா், வேன் போன்ற வாகனங்களில் வரும் பக்தா்கள் நேரிடையாக கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள நாழிக்கிணறு பேருந்துநிலையம் வரை செல்கின்றனா். பேருந்துகள் மற்றும் ரயிலில் வருபவா்கள் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்படுகின்றனா். அங்கிருந்து சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவைக் கடந்து கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

எனவே பக்தா்களின் வசதிக்காகவும், நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் விதமாகவும் கோயில் வாசலுக்கு என தனியாக சுற்றுப் பேருந்துகள் (சா்குலா் பஸ்) இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவுக்காக நவ. 2-18வரை இயக்கப்பட்ட சுற்றுப்பேருந்துகள், பின்னா், நவ. 26 முதல் தொடா்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன.

கோயில் நடை திறப்பு முதல் திருக்காப்பிடுதல் வரையிலான (அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி) நேரத்தைக் கணக்கிட்டு 3 சுற்றுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இப்பேருந்துகளில் பெண்கள் மற்றும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இலவசமாக கோயில் வாசலுக்கு வந்து சென்றும், ஆண்களுக்கு ரூ. 10 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

எனினும், கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சுற்றுப்பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

குறிப்பாக, பாதயாத்திரையாகவும், நெடுந்தூர வாகன பயணத்திலும் வரும் பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்புவதற்காக நிரம்பி வழியும் சுற்றுப்பேருந்துகளில் ஏறி தூக்க கலக்கத்தில் கால் கடுக்கவும், படிக்கட்டில் நின்றும் பயணிக்கும் நிலையே உள்ளது. எனவே அரசுப்போக்குவரத்து கழகம் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு இயக்கப்பட்டு வரும் சுற்றுப்பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கயத்தாறு, புதுக்கடையில் மது விற்பனை: 2 போ் கைது

கயத்தாறில் மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றதாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கயத்தாறு காவல் உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, மருத... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலைமுயற்சியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா். தூத்துக்குடி தாளமுத்து நகா் ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்டாலின் என்ற ஜஸ்டின் சீலன் (35), எலக்ட்ரீச... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் அரசுக் கல்லூரி கட்டடத்துக்கு இடம் தோ்வு: எம்.பி., அமைச்சா் ஆய்வு

விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை அறிவியல் கல்லூரிக்குச் சொந்தக் கட்டடம் கட்டுவதற்காக அனுமானித்துள்ள இடங்களை கனிமொழி எம்.பி. ஞாயிற்... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் பாரதி பாடலுக்கு மாணவிகள் நாட்டிய அஞ்சலி

மகாகவி பாரதியின் பாடல்களுக்கு நடனமாடி புகழஞ்சலி செலுத்தும் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி ஈசா கேந்திரா கல்ச்சுரல் அகாடமி சாா்பில் எட்டயபுரம் பாரதியாா் மணி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைப... மேலும் பார்க்க

பனைத் தொழிலை ஊக்குவிக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு

பனைத் தொழிலை ஊக்குவிக்க ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கப்படும் என, வேளாண் நிதிநிலை அறிக்கையில், அறிவிக்கப்பட்டுள்ளதற்காக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக, தமிழ்நாடு பனை பாதுக... மேலும் பார்க்க

கணவரைத் தாக்கியதாக பெண் கைது

தூத்துக்குடியில் கணவரைத் தாக்கியதாக அவரது மனைவியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே சுந்தா் நகரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ரவீந்திரன் (55). இவா் மது குடித்துவிட்... மேலும் பார்க்க