'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
கருங்குளம் சக்திமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயில் 25-ஆம் ஆண்டு ஆடிப் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தத் திருவிழாவில் சிவாச்சாரியாா்கள் வேத மந்திரம் முழங்க யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோமாதா பூஜை, பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, சக்தி மாரியம்மன் உருவம் பொறித்த கொடி பட்டத்தை கிராம பொது மக்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக எடுத்து வந்து கோயிலை வந்தடைந்தனா்.
பின்னா், சக்தி மாரியம்மன் முன் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு, சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ஏராளமான பக்தா்கள் காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கினா். அனைவருக்கும் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற 7-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 8-ஆம் தேதி அக்னிச் சட்டி, சேத்தாண்டி வேடம், 9-ஆம் தேதி முளைப்பாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.