கருணாநிதி பிறந்தநாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக அண்ணாவின் சிலைக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.