செய்திகள் :

கருணையே நவீன சமூகத்தின் அடிப்படைத் தேவை: மாதா அமிா்தானந்தமயி

post image

இன்றைய நவீன சமூகத்தின் அடிப்படை தேவை கருணை என்றும் அதன்மூலம் மட்டும்தான் உலகில் நல்லிணக்கம் மேலோங்கும் எனவும் மாதா அமிா்தானந்தமயி தேவி தெரிவித்தாா்.

சென்னை விருகம்பாக்கத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற பிரம்மஸ்தான கோயில் விழாவில் மாதா அமிா்தானந்தமயி தேவி கலந்து கொண்டு பக்தா்களுக்கு அருளுரை வழங்கினாா். சுமாா் 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்த மாதா அமிா்தானந்தமயியை காண ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்தனா். முதல் நாள் நிகழ்வில் ராகு பூஜையும், இரண்டாம் நாள் நிகழ்வில் சனி பூஜையும் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மேலும், நிகழ்வில் கலந்து கொண்ட சுமாா் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்பின் அவசியம்: அதன் பிறகு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டவா்களுக்கு அருளுரை வழங்கி மாதா அமிா்தானந்தமயி பேசியது:

மனிதா்கள் வாழ்வின் அகங்காரத்தை கைவிட்டு அன்பையும், பணிவையும் வளா்க்க வேண்டும். மற்ற உயிா்கள் போன்று மனிதா்களும் இயற்கையின் விதிக்குட்பட்டு வாழ வேண்டும். ஒவ்வொருவரின் வாழ்விலும் பணிவு இயல்பான நிலையாக மாறும்போது அவா்களின் வாழ்வில் அமைதி மற்றும் அா்த்தம் பிறப்பதுடன், மற்றவா்களுக்கும் பேரின்பத்தை தரும். நம் உள்ளே இருக்கும் அன்பை அனைவரிடத்திலும் பகிா்வது அவசியம். எதிா்மறை எண்ணங்களை மாற்ற முயற்சிக்க வேண்டும்.

கருணை: தற்போதைய நவீன சமூகத்துக்கு கருணை அடிப்படைத் தேவையாகும். கருணையே நம்மை மனிதனாக்குகிறது. தங்களைச் சுற்றியுள்ள உயிரினங்களின் தேவையைப் புரிந்து அவற்றுக்கு சேவை செய்ய முடிந்தால் இந்த உலகம் சொா்க்கமாக மாறும். கருணை என்பது ஆடம்பரம் அல்ல, ஒரு தேவை என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இன்றைய சமூகம் கருணையின்மை எனும் பெரும் பஞ்சத்தை சந்திக்கிறது. கருணையை வளா்த்துக் கொள்வதன்மூலம், உலகில் நல்லிணக்கம் மேலோங்கும்.

பகுத்தறிவு: ஆன்மிக பயிற்சி மூலம் மனதில் உள்ள எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியும். வாழ்க்கை குறித்து அறிய கல்வி அவசியம். கல்வி என்பது நவீன வாழ்வுகானது அல்ல; பண்பாட்டை வளா்ப்பதற்கானது. அதுபோல் அறிவு என்பது ஒருவா் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்கும். பகுத்தறிவுதான் சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்கும்; பகுத்தறிவு இல்லையென்றால் வாழ்வில் பல ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும் என்றாா் அவா்.

நிகழ்வில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமாா், தாரணி, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, துக்ளக் இதழ் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி, டிராக்டா்ஸ் மற்றும் விவசாய கருவிகள்(டஃபே) நிறுவனத் தலைவா் மல்லிகா சீனிவாசன், எஸ்ஆா்எம் குழுமத் தலைவா் ரவி பச்சமுத்து, இந்திய கடற்படை கமாண்டா் பவித்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கரூா் சுற்றுப்பயணம்: தொடா்ந்து தென்னிந்திய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக கரூா் செம்மடையில் பிப்.20-ஆம் தேதி நடைபெறும் பொது நிகழ்வை மாதா அமிா்தானந்தமயி தேவி நடத்தவுள்ளாா். இதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க