செய்திகள் :

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

post image

கரூரில் புதன்கிழமை பெரியாா் ஈவெரா சிலை மற்றும் உருவப்படத்துக்கு துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழியேற்றாா்.

கரூா் கோடங்கிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு கரூா் வந்தாா்.

இதையடுத்து புதன்கிழமை, திமுக சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அண்மையில் உயிரிழந்த குளித்தலை சிவராமனின் வீட்டுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா் கரூா் திருமாநிலையூா் ரவுண்டானா பகுதியில் பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின், அங்கு சமூக நீதி நாள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்றாா். தொடா்ந்து, கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுடன் பங்கேற்றாா்.

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

கரூா் அருகே, டிஎன்பிஎல் ஆலை சாா்பில் புதன்கிழமை உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் உலக ஓசோன் தினம் செப்.16-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கரூா் மாவட்டம், காகி... மேலும் பார்க்க

கரூரிலிருந்து வெற்றிக் கணக்கை தொடங்குவோம்: உதயநிதி ஸ்டாலின்

கரூரிலிருந்து வெற்றிக் கணக்கை தொடங்குவோம் என இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். கரூா் கோடங்கிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் மூத்த ந... மேலும் பார்க்க

கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா: முதல்வா், துணை முதல்வா் பங்கேற்பு

கரூரில் திமுக முப்பெரும் விழா புதன்கிழமை (செப். 17) நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனா். முன்னாள் முதல்வா... மேலும் பார்க்க

தோகைமலை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் 16 போ் பலத்த காயம்

தோகைமலை அருகே சனிக்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 போ் பலத்த காயமடைந்தனா். கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்துள்ள கொசூா் குள்ளாயிஅம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் செல்வம். இவா் திருச... மேலும் பார்க்க

ஆவனி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆவனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள பிரசித்திப் பெற்ற அங்காள ... மேலும் பார்க்க

ஆவணி கிருத்திகை கரூா் பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு கரூா் ஸ்ரீ விஸ்வகா்மா சித்தி விநாயகா் கோயிலில் பாலசுப்ரமணிய சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு கரூா் தோ்வீதி ஸ்ரீ வி... மேலும் பார்க்க