செய்திகள் :

கரூர் சம்பவம்: ``அனைவரையும் பார்த்து ஆய்வு செய்யும் வரை'' - விசாரிக்க வந்த எம்.பி குழு சொல்வதென்ன?

post image

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதில் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் கரூரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ஜே.பி நட்டா அமைத்ட குழு அறிக்கை
ஜே.பி நட்டா அமைத்ட குழு அறிக்கை

ஜெ.பி.நட்டா அமைத்த குழு

இந்தச் சம்பவத்தை விசாரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து 8 எம்.பிக்கள் குழு ஒன்றை ஜே.பி நட்டா அமைத்துள்ளார். இந்தக் குழுவின் தலைவராக ஹேமமாலினி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசக் கட்சியில் புட்டா மகேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு தற்போது கோவை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. 

இவர்களைப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.

கரூர் துயரம் - தவெக
கரூர் துயரம் - தவெக

ஹேமமாலினி பேசியது என்ன?

கோவை விமான நிலையத்தில் ஹேமமாலினி, "நாங்கள் அனைவரும் கரூரில் என்ன நடந்தது, எதனால் இந்தச் சம்பவம் ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்ய வந்திருக்கிறோம்.

இந்தச் சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் வந்திருக்கிறோம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் செல்ல இருக்கிறோம்.

பின்னர், ஆய்வு செய்த தகவல்களை அறிக்கையாக சமர்ப்பிப்போம்" என்று பேசினார்.

"எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. அனைவரையும் பார்த்து ஆய்வு செய்யும் வரை நாங்கள் இங்கு இருப்போம்" என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

"கரூர் உண்மையை மறைக்க நாடகத்தை நடத்துகிறது இந்த ஸ்டாலின் அரசு" -எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 42 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தத் துயர சம்பவம்... மேலும் பார்க்க

ஆதவ் அர்ஜுனா: "விரைவில் அவர்களைச் சந்திப்போம்" - செய்தியார்களிடம் ஆதவ் பேசியதென்ன?

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக... மேலும் பார்க்க

அதானியின் Clean Chit முதல் நீட்டிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கல் வரை; செப்டம்பர் ரீவைண்ட்!

இந்த செப்டம்பர் மாதம் நிதி மற்றும் பொருளாதாரம் சம்பந்தமாக இந்தியா மற்றும் உலகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்ப்போம். செப்டம்பர் 3 - ஜி.எஸ்.டி 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, இதுவரை இருந்த 5%, 12... மேலும் பார்க்க

தவெக விஜய்: "நம்மால் நடந்துவிட்டதென்ற குற்ற உணர்ச்சியால் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்" - ஆ.ராசா MP

கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து பெருந்துயரம் ஏற்பட்டது.கடந்த இரண்டு நாள்களாக முதல்வர் ஸ்டாலின் மு... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை தீவிரவாதிகளாக அறிவித்த கனடா; இந்தியாவுடனான உறவில் புது திருப்பம்

இந்தியாவில் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது தவிர நடிகர் சல்மான் கானுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் தொடர்ந்து கொலை மிரட... மேலும் பார்க்க