கரூர் கூட்ட நெரிசல் பலி: உச்ச நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நயினார் நாகேந்...
கரூர் விஜய் பரப்புரை: இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை; ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எவ்வளவு?
நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்துள்ளனர்.
இதுவரை வெளியான தகவல்கள்:
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 13 ஆண்கள், 16 பெண்கள், 10 குழந்தைகள் அடங்குவர்.
இதுவரை இந்த 39 பேரில் 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 17 பேர் ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர்.

கூடுதலாக,
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாமக்கல், சேலத்தில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், மதுரையில் இருந்தும் 30 அரசு மருத்துவர்கள், 15 செவிலியர்கள் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை அடையாளம் காணப்பட்ட நபர்களில் பெயர் பட்டியல் இதோ...