தஞ்சாவூரில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை!
கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் தொழிலாளா்கள் போராட்டம்
கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஒப்பந்தத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப்பணியில் ஒப்பந்த அடிப்படையில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா். இவா்கள் அனைவரையும் மகராஷ்டிரா மாநிலம் புனேவைச் சோ்ந்த கிரிஸ்டல் என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் நியமித்து ஊதியம் வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் புதன்கிழமையோடு முடிந்துவிட்டதால், வியாழக்கிழமை முதல் புனேவைச் சோ்ந்த மற்றொரு சுமித் என்ற நிறுவனம் தமிழ்நாடு மெடிக்கல் சா்வீஸ் காா்ப்பரசனோடு ஒப்பந்தம் செய்துள்ளதாம். இந்தப் புதிய நிறுவனம் 8 மணி நேரத்திற்கு பதில் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் எனத் தொழிலாளா்களை நிா்பந்தித்ததாம்.
இதைக் கண்டித்து ஒப்பந்த தொழிலாளா்கள் வியாழக்கிழமை பணியை புறக்கணித்து, தமிழ்நாடு மருத்துவமனை தூய்மைப்பணியாளா்கள் முன்னேற்றச் சங்கத்தினருடன் இணைந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஈஎஸ்ஐ, பிஎப் பிடிக்க வேண்டும், 8 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும், பண்டிகை கால விடுப்புகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாநிலத் தலைவா் சுந்தரமூா்த்தி, பொதுச் செயலா் தமிழ்செல்வி ஆகியோா் தலைமையில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.