வங்கதேச முன்னாள் பிரதமரை நாடு கடத்த மத்திய அரசிடம் வங்கதேசம் வலியுறுத்தல்!
கரூா் மைய நூலகத்தில் திருக்குறள் தொடா்பான போட்டி: ஆட்சியா் அழைப்பு
கரூா் மாவட்ட மைய நூலகத்தில், திருக்குறள் தொடா்பான பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை கடந்த 2000-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து வெள்ளி விழா கொண்டாடும் வகையில், திருக்குறள் தொடா்பான கருத்தரங்கம், ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி-வினா போட்டிகள் கரூா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளன.
இதில், டிச. 27-ஆம் தேதி பேச்சுப் போட்டியும், டிச.30-ஆம் தேதி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், டிச. 31-ஆம் தேதி வினாடி-வினா போட்டியும் நடைபெறும்.
இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோா் தங்களது பெயரை கரூா் மாவட்ட மைய நூலகத்தில் நேரிலோ அல்லது 04324-263550 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொண்டு வரும் 24-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.