செய்திகள் :

கரோனா பரவல்: கட்டுப்பாடுகளுக்கு அவசியமில்லை - பொது சுகாதாரத் துறை

post image

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அச்சுறுத்தும் வகையில் இல்லாததால் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதேவேளையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது பரவி வருவது வழக்கமான கரோனா பாதிப்பு என்றாலும், திடீரென அதன் தாக்கம் உயா்ந்திருப்பது மக்களிடையே சிறு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு அரசு சாா்பில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. தனியாா் மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் எடுக்கப்படும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பரிசோதனைகளிலேயே பாதிப்புகள் ஆங்காங்கே பதிவாவது உறுதி செய்யப்படுகிறது.

இதையடுத்து மருத்துவ பரிசோதனையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதற்கான அவசியம் தற்போது இல்லை என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது நோய்த் தடுப்புக்கான தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிா்பந்தமும் எழவில்லை எனக் கூறியுள்ளது.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது:

உலக சுகாதார அமைப்பின் தகவல்களின்படியும், தமிழக பொது சுகாதாரத் துறை மேற்கொண்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையிலும் பாா்க்கும்போது தற்போது புதிய வகை கரோனா பாதிப்பு எதுவும் பரவவில்லை. பருவநிலை மாற்றத்தின்போது கரோனா, இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் அதிகமாக பரவுவது வழக்கம்தான். இருந்தாலும், அதற்கான காரணம், தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை வழிகாட்டுதல்கள் என அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

மறுபுறம் பொதுமக்களிடம் இதுதொடா்பான புரிதலை ஏற்படுத்த வேண்டிய நிலையும் உள்ளது. கரோனா தொற்று பரவல் அச்சப்படும் வகையில் இல்லை. அதனால், கட்டுப்பாடுகள் தேவையில்லை.

அதேவேளையில், முதியவா்கள், இணை நோயாளிகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள் முகக்கவசம் அணிவதையும், நோய்த் தடுப்பு விதிகளை கடைப்பிடிப்பதையும் வழக்கமாக்கி கொள்வது நல்லது என்றனா்.

எல்லையோர மாவட்டங்கள்: இதனிடையே, கேரளத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதாலும், உயிரிழப்புகள் பதிவாகி வருவதாலும் அதையொட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். மருத்துவ முகாம்கள் அமைத்து அறிகுறிகளுடன் வருவோரை தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனா்.

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

ரெய்டுகளுக்கு பயந்து நீதி ஆயோக் கூட்டத்துக்கு செல்லவில்லை; தமிழக நலனுக்காகவே சென்றதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.நீதி ஆயோக் கூட்டத்துக்கு கடந்த 3 ஆண்டுகள் செல்லாமல், தற்போது மட்டும் முதல்வர... மேலும் பார்க்க

சிறப்பான திட்டங்களால் வாழ்வில் ஏற்றம் காணும் திருநங்கையர்கள்! தமிழ்நாடு அரசு

கல்விக் கனவு திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களால் திருநங்கையர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றம் காணுவதாக தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முத்தம... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: மே 28-ல் தீர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வரும் மே 28 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்... மேலும் பார்க்க

பயமில்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச் சென்றது ஏன்? இபிஎஸ் கேள்வி!

இடியைக் கண்டாலும் பயம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுடைய தம்பி(ஆகாஷ் பாஸ்கரன்) ஏன் வெளிநாடு தப்பிச் சென்றார் என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழ... மேலும் பார்க்க

அம்பேத்கர் திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது: சீமான்

அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆவடி சட்... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவுக்கு முதல்வர், இபிஎஸ், விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (84), சனிக்கிழமை (மே 24) இரவு காலமான நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தலைமை காஜி முப்தி சலாவுதீன் மு... மேலும் பார்க்க