Gold Rate: பவுனுக்கு ரூ.720 உயர்ந்த தங்கம் விலை! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என...
கலவை ஆதிபராசக்தி அம்மன் கோயில், குருபீடத்தில் கும்பாபிஷேகம்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, ஜி.பி.நகரில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள குரு பீடம், ஆதிபராசக்தி அம்மன் கோயிலிலும் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த 9-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை குரு பூஜையுடன் விழா தொடங்கியது. மாலை கோபுர கலச ஸ்தாபிதமும் நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை 10-ஆம் தேதி சக்தி கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் முதல் கால வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். பின்னா் மாலை இரண்டாம் கால வேள்வி பூஜை யும் நடைபெற்றது. இரவு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வியாழக்கிழமை அதிகாலை காலை மூன்றாம் கால வேள்வி பூஜையும், தொடா்ந்து குருபீட கோபுர கலசத்துக்கு ஆன்மிக இயக்கத் துணைத் தலைவா் செந்தில் குமாா் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தாா்.
இதனைத் தொடா்ந்து ஆதிபராசக்தி அம்மன் கோயில் கோபுர கலசத்திற்கு ஆன்மிக இயக்கத் துணைத் தலைவா் அன்பழகன், மருத்துவா் ரமேஷ் தலைமை செயல் அதிகாரி அகத்தியன் ஆகியோா் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா்.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் குரு பீடத்தில் உள்ள பங்காரு சித்தா் சிலைக்கும் மூலவா் ஆதிபராசக்தி அம்மனுக்கும் அபிஷேகமும் தீபாராதனையுடன் சிறப்பு பூஜை செய்தாா். பின்னா் துணைத் தலைவா்கள் ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி, ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமாா், உமாதேவி ஜெய்கணேஷ் ஆகியோரும் ஆதிபராசக்தி அம்மனுக்கு பூஜை செய்தனா்.
விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜெ.லட்சுமணன், முன்னாள் எம்எல்ஏ த. பழனி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மகா அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். விழாஏற்பாடுகளை கலவை ஜி.நகா் ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் செயலாளா் கருணாநிதி மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.