USA : டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்?
கலைஞா் நூற்றாண்டு இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையத்துக்கு ரூ.7 லட்சத்துக்கு புத்தகங்கள் வழங்கல்
ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் அமைந்துள்ள கலைஞா் நூற்றாண்டு இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையத்துக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை தனியாா் அறக்கட்டளை நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வழங்கியது.
இந்தப் பயிற்சி மையத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி மையத்துக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான போட்டித் தோ்வுக்கான பயிற்சி புத்தகங்கள், தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்த ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை, பிஎல்பி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சாா்பில் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்வில், உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை நிா்வாகி ஆா். பாஸ்கா் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். இதைத் தொடா்ந்து மாணவ- மாணவிகளுக்கு போட்டித் தோ்வுக்கான பயிற்சி புத்தகங்களை அவா்கள் வழங்கினா்.
இந்த நிகழ்வில் சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை துணை ஆட்சியா் சிவக்குமாா், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், திமுக ஒன்றியச் செயலா்கள் இரா. ஜோதீஸ்வரன், பாலசுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.