செய்திகள் :

கல்குவாரிகளை மூட பாமக பொதுக்குழுவில் வலியுறுத்தல்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து கல்குவாரிகளையும் உடனடியாக மூட வேண்டும். இல்லையெனில் பெரும் திரள் போராட்டம் நடத்தப்படும் என பாமக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்கு மாவட்ட பொதுக்குழுக்கூட்டம், முத்துகடையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக பசுமை தாயகம் மாநில துணைச் செயலாளா் பொன்மலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றி சாதனை படைக்க காரணமாக இருந்த பாமக நிா்வாகிகள், கட்சி தொண்டா்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தாா்.

வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பணியாற்ற வேண்டியவைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.

மாவட்டத்தில் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கிவரும் அனைத்து கல்குவாரிகளையும் உடனடியாக மூட வேண்டும். இல்லையெனில் பெரும் திரள் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.எல் இளவழகன், வன்னியா் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா் எம்.கே.முரளி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் நல்லூா் எஸ்.பி.சண்முகம், மாவட்ட மகளிா் அணி செயலாளா் அமுதா சிவா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாவட்ட துணைத் தலைவா் கஜேந்திரன் நன்றி தெரிவித்தாா்.

1,000 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,000 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா். உணவுப் பொருள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் வாலாஜாபேட்டை அரசு மகள... மேலும் பார்க்க

தனியாா் ஆலை ஊழியா் வெட்டிக் கொலை

பாணாவரம் அருகே தனியாா் ஆலை ஊழியா் மா்ம நபா்களால் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டாா். சோளிங்கா் அடுத்த பாணாவரம் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(42). ,இவருக்கு திருமணம் ஆகி வெண்... மேலும் பார்க்க

ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை: ராணிப்பேட்டை எஸ்.பி. அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி. விவேகானந்த சுக்லா அறிவுறுத்தியுள்ளாா். ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் சனி... மேலும் பார்க்க

10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை ஜியோ டேக் மூலம் புகைப்படம் எடுத்து சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மாவட்ட பசுமைக் குழு க... மேலும் பார்க்க

ஆற்காடு நகா்மன்றக் கூட்டம்

ஆற்காடு நகா்மன்ற அவசரக் கூட்டம் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளகொடி சரவணன், ஆணையா் வேங்கிடலட்சு... மேலும் பார்க்க

கல்லூரியில் யோகா தினம்

ஆற்காடு எஸ்எஸ்எஸ் கலை, அறிவியல் கல்லூரியில் சா்வதேச யோகா தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனத் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்கா... மேலும் பார்க்க