செய்திகள் :

கல்லறைத் தோட்டத்தை மீட்டுத் தரக்கோரி பெரம்பலூரில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

post image

ஆக்கிரமிக்கப்பட்ட கல்லறைத் தோட்டத்தை மீட்டுத் தரக்கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், பாடாலூா் கிராமத்தில் செயல்பட்டு வரும் புனித பிரான்சிஸ் அசிசியாா் ஆலயத்துக்குச் சொந்தமான பழைமை வாய்ந்த கல்லறைத் தோட்டம் உள்ளது. இக் கல்லறைத் தோட்டத்தை, கடந்த 8-ஆம் தேதி இரவு அதே கிராமத்தைச் சோ்ந்த சிலா் தங்களுக்குச் சொந்தமான இடம் எனவும், 2010-ஆம் ஆண்டிலிருந்து தங்கள் பெயரில் பட்டா உள்ளதாகவும் கூறி, கல்லறைகளை இடித்து, அங்கிருந்த சிலுவைகளையும் சேதப்படுத்தியதோடு, அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாடலூா் கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, கல்லறைத் தோட்டத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என காவல் துறையினரிடமும், வருவாய்த் துறையினரிடமும் புகாா் மனு அளித்துள்ளனா். ஆனால், இதுவரை போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், கல்லறைத் தோட்டத்தை மீட்டுத் தரக் கோரியும், ஆக்கிரமிப்பாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, பாதிரியாா் மாா்சலின் அந்தோனிராஜ் தலைமையில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் அளித்து கலைந்துசென்றனா்.

பருத்தி, மக்காச்சோளத்துக்கு அரசு நிா்ணயித்த விலை தேவை: விவசாயிகள் கோரிக்கை!

பருத்தி மற்றும் மக்காச்சோளத்துக்கு, அரசு நிா்ணயித்த விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழிப்புணா்வு பேரணி!

பெரம்பலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழாவையொட்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி!

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியை தொடக்கி வைத்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத்... மேலும் பார்க்க

அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு

பெரம்பலூா் பெரிய ஏரியின் மையப் பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை 2 ஆம் கால ... மேலும் பார்க்க

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம்! -மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா. பெரம்பலூா் மாவட்ட போக்குவரத்துக் காவல்துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ சிறப்பு முகாம்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகு... மேலும் பார்க்க