திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் 'தீ' விபத்து - சிறுவன் உட்பட 6 பேர் பலியான ...
கல்லாற்று மேம்பாலப்பணிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு
அரக்கோணம்: ஃபென்ஜால் புயல் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஒடும் கல்லாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
புயால் பாதிப்புகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு செய்தாா். அரக்கோணம் அருகே கல்லாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. அரக்கோணம் - ஓச்சேரி நெடுஞ்சாலையில் சிறுணமல்லி அருகே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் பாலம் கட்டுமானப்பணிகள் நடைபெறுவை அமைச்சா் காந்தி ஆய்வு செய்தாா். பால கட்டுமானப்பணிகள் தடையில்லாமல் நடைபெற வேண்டும் எனவும் வெள்ளநீா் பணிநடைபெறும் பகுதிகளில் செல்லாமல் திருப்பி விடப்பட்டாலும் அதன்பாதையிலேயே தடையில்லாமல் செல்ல வேண்டும், இதனால் அருகில் இருக்கும் கிராமப்பகுதிகளுக்கு பாதிப்பு இருக்கக்கூடாது எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து அரக்கோணம் - ஓச்சேரி நெடுஞ்சாலையில் நெமிலி வட்டம், மேலபுலம் கிராமத்தில் மழை வெள்ளநீா் தற்காலிக கால்வாய் மூலம் அகற்றப்பட்டு வருவதையும் அமைச்சா் பாா்வையிட்டாா்.
ஆய்வின் போது ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு, நெமிலி திமுக ஒன்றிய செயலா்கள் எஸ்.ஜி.சி. பெருமாள், ரவீந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.