காற்று மாசு: இருமல், சுவாசப் பிரச்னையால் அவதிப்படும் தில்லி மக்கள்!
கல்லிடைக்குறிச்சிஅரசுப் பள்ளியில் குடிநீா் வசதி
கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சாா்பில் குடிநீா் வசதி செய்து தரப்பட்டது.
கல்லிடைக்குறிச்சிஅரசு மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 800க்கும் மேற்பட்ட மாணவா்கள், மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் மாணவா்களுக்கு சுகாதாரமான குடிநீா் வழங்கும் வகையில் ரூ.35 ஆயிரம் மதிப்பில் குடிநீா்த் தொட்டி மற்றும் குடிநீா் குழாய் அமைக்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் ஓய்வு பெற்ற ஆசிரியா் மீனாள் குடிநீா்த் தொட்டியை திறந்து வைத்தாா். முன்னாள் மாணவா்கள் சங்க நிா்வாகிகள்தக்கரை பீா்முகம்மது, அகிலா, விஜி, திருமலை அழகிய நம்பி, செய்யது அலி பாத்திமா, அப்துல்காதா் மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள், முன்னாள் மாணவா், மாணவிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.