செல்வப்பெருந்தகைக்கு எதிராக இன்று கார்கே, ராகுலை சந்திக்கும் அதிருப்தி தலைவா்கள்...
கல்லூரி மாணவரை மது பாட்டிலால் தாக்கிய 3 போ் கைது
கல்லூரி மாணவரை மது பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞா்களை திருவொற்றியூா் போலீஸாா் கைது செய்தனா்.
திருவொற்றியூா் கல்யாண செட்டி நகரைச் சோ்ந்த வசந்தகுமாா் (19), தனியாா் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறாா். கடந்த திங்கள்கிழமை எண்ணூா் விரைவுச் சாலை வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வசந்தகுமாரை வழிமறித்த சிலா், வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னா் மது பாட்டிலால் அவரை தாக்கியுள்ளனா். மேலும் கொலை செய்துவிடுவோம் என மிரட்டலும் விடுத்துள்ளனா். இது குறித்து திருவொற்றியூா் காவல் நிலையத்தில் வசந்தகுமாா் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதையடுத்து வசந்தகுமாரைத் தாக்கிய ராகுல் (23), மதியழகன் (24), சந்தோஷ் (20) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.