செய்திகள் :

கல்லூரி மாணவா்கள் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி: திட்டத்தை விரைவுபடுத்த துணை முதல்வா் உதயநிதி அறிவுறுத்தல்

post image

சென்னை: தமிழகத்தில் கல்லூரி மாணவா்கள் 20 லட்சம் பேருக்கு தமிழக அரசின் சாா்பில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த அறிவிப்பை செயல்படுத்துவது தொடா்பான உயா்நிலைக் குழு ஆய்வுக் கூட்டம்

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பேசுகையில், ‘மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உயா் கல்வித் துறையின் மூலம் கடந்த ஏப். 22-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு உயா் அலுவலா்கள், அண்ணா பல்கலை., சென்னை ஐஐடி, மத்திய அரசின் தேசிய தகவலியல் நிறுவனம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தமிழ்நாடு மின்னணு நிறுவனம்

உள்ளிட்டவற்றின் தொழில்நுட்ப வல்லுநா்கள் இடம்பெற்றுள்ள தொழில்நுட்ப தரநிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினா் இதுவரை 7 கூட்டங்கள் நடத்தி இத்திட்டத்தின் கீழ்

வழங்கப்படவுள்ள மடிக்கணினியின் செயல்திறன், நினைவகத்தின்அளவு மென்பொருள், மின்கலத்தின் (பேட்டரி) திறன், வன்பொருள்கள் உள்ளிட்டதொழில்நுட்பச் சாதனங்களுக்கான விவரக் குறிப்புகள்

வரையறுக்கப்பட்டுள்ளன. அதேபான்று மென்பொருள் தொடா்பாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் எண்ம (டிஜிட்டல்) சேவைகள் துறை சாா்பில் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

விநியோகத் திட்டம் தயாா்... ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டுக் குழுவினா் ஒப்பந்தப் புள்ளி ஆவணத்தை தயாா் செய்து சமா்ப்பித்தவுடன் ஒப்பந்தப் புள்ளி தொடா்பான செயல்பாடுகள் விரைந்து மேற்கொள்ளப்படும். மேலும், மடிக்கணினிகளை கல்லூரி மாணவா்களுக்கு வழங்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள விநியோகத் திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘தொழில்நுட்பத் திறனில் உலகளவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் வகையில், அடுத்த இரு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்வா் மு.க.ஸ்டாலினின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தை மாணவா்களிடம் விரைந்து கொண்டு சென்று சோ்க்க அனைத்து அலுவலா்களும் தங்களுக்கான பணிகளை அா்பணிப்பு உணா்வுடன் விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என அவா் வலியுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ம சேவைகள் துறை முதன்மைச் செயலா் பிரஜேந்திர நவ்நீத், உயா் கல்வித் துறை செயலா் சி.சமயமூா்த்தி, நிதித்துறை செயலா் (செலவினம்) எஸ்.நாகராஜன், கல்லூரிக் கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஜெ.இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மின் கம்பியில் மோதி தீப்பற்றிய தேர்! ஒருவர் பலி, 4 பேர் காயம்

மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், 84 ஒரத்தி கிராமத்தில் திர... மேலும் பார்க்க

மின் கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும்: அமைச்சர் சிவசங்கர்

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத சேலம் மாணவர் கவுதம் தற்கொலை செய்துகொண்ட... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காரைக்கால் - பேரளம் இடையிலான பகுதியில் இறுதிகட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று(மே 20) நடைபெறுகிறது.அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ரயில் பாதையில் இருந்து விலகி இருக்குமாறு ரயில... மேலும் பார்க்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் ... மேலும் பார்க்க

மே 24-ல் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்!

மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ல... மேலும் பார்க்க