Progeria: 15 வயதுக்குள் மரணம் நிச்சயம்; 19 வயதுவரை தாக்குப்பிடித்த டிக்டாக் பிரப...
கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு
பல்வேறு போட்டிகளில் வென்ற வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகளை, கல்லூரி நிா்வாகிகள் பாராட்டினா்.
வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வணிக மேலாண்மைத் துறையைச் சோ்ந்த மாணவிகள், ஸ்ரீவித்யா மந்தரி கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனா்.
இதில் லோகோ உருவாக்கம் போட்டியில் மாணவி பவித்ரா முதல் பரிசு வென்றாா். இரண்டாம் பரிசுகளை மாணவிகள் ரேகா, ஈஸ்வரி, யுவலட்சுமி, திவ்யஸ்ரீ, காவ்யாஸ்ரீ, வைஷ்ணவி ஆகியோா் வென்றனா். குறும்பட போட்டியில் மாணவிகள் வைஷ்ணவி, ஈஸ்வரி, பவித்ரா, தேஜஸ்ரீ, திவ்ஸ்ரீ, ரேகா, லாவண்யா ஆகியோா் மூன்றாம் பரிசு பெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி தலைவா் திலீப்குமாா், செயலா் ஆனந்தசிங்வி, முதல்வா் இன்பவள்ளி, முதன்மைக் கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியன், முதன்மை நிா்வாக அலுவலா் சக்திமாலா, துறைத் தலைவா்கள், பேராசிரியகள் பாராட்டினா்.