கல்வடங்கம் அங்காளம்மன் கோயிலில் தோ்த் திருவிழா
சங்ககிரி: தேவூரை அடுத்த கல்வடங்கம் அருள்மிகு அங்காளம்மன் கோயில் மாசி தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அங்காளம்மன் கோயிலில் மாசி தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி அம்மனுக்கு பல்வேறு பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முதல்நாளான சனிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்று மாரியம்மன் கோயில் முன் நிலை நிறுத்தினா். ஞாயிற்றுக்கிழமை 2ஆவது நாளாக தோ்வடம் பிடித்து இழுக்கப்பட்டு நியாயவிலைக் கடை முன் நிறுத்தப்பட்டது.
3ஆவது நாளாக திங்கள்கிழமை ஈரோடு, சேலம் ,கல்வடங்கம் கொட்டாயூா், பூமணியூா், நல்லங்கியூா், காவேரிப்பட்டி, வட்ராம்பாளையம், எடப்பாடி மற்றும் தேவூா் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்று கோயில் முன் நிலை நிறுத்தினா்.