செய்திகள் :

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு!

post image

சென்னையில் நாளை (செப்.25) 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நடைபெறுவதையொட்டி அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெலங்கானா சென்று இந்த விழாவுக்கான அழைப்பிதழை முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற கொண்டாட்ட விழா செப். 25 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் தகவல் தெரிவித்தார்.

நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், விளையாட்டு சாதனையாளர்கள் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்வில் அரசின் கல்வி சார்ந்த திட்டங்களில் பங்கேற்று பயன்பெற்றவர்கள் தங்களது அனுபவத்தை பகிர்வார்கள் என்றும் இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்றும் கூறியிருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப். 25 ஆம் தேதி மாலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இந்த விழா நடைபெற உள்ளது.

'kalviyil sirantha Tamil Nadu' ceremony: Invitation to Telangana Chief Minister Revanth Reddy

கவின் கொலை விவகாரம்: சிபிசிஐடி போலீஸார் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!

கவின் கொலை விவகாரத்தில், காதலைக் கைவிடுமாறு கவின் மிரட்டப்பட்டார் என்று விசாரணையின்போது சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.மாற்றுச் சமூகத்து பெண்ணை காதலித்தற்காக கவின் செல்வகணேஷ் நெல்லைய... மேலும் பார்க்க

நாளை முதல் 3 நாள்களுக்கு கனமழை!

தமிழகத்தில் நாளை முதல் 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று (23-09-2025) காலை மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா - வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில... மேலும் பார்க்க

வேலூரில் தந்தை மீது மிளகாய் பொடி தூவி 4 வயது குழந்தை கடத்தல்!

வேலூர்: வெலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தந்தை மீது மிளகாய் பொடி தூவிவிட்டு, அவரிடமிருந்த 4 வயது குழந்தையை கடத்தல்காரர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பள்ளி சென்றுவிட்டு... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக, இதுவரை விசாரணை நடத்தி திரட்டிய ஆவணங... மேலும் பார்க்க

பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கவே முடியாது: டிடிவி தினகரன் உறுதி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ... மேலும் பார்க்க

அக். 6ல் தமிழகம் வருகிறார் ஜெ.பி.நட்டா: நயினார் நாகேந்திரன் தகவல்

வருகிற அக். 12 ஆம் தேதி மதுரையில் இருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "வருகிற அக். 6 ஆம் தேதி பாஜக ... மேலும் பார்க்க