செய்திகள் :

கல்வி அமைச்சரிடம் நெல்லை எம்.பி. மனு

post image

காரியாண்டி பள்ளியை தரம் உயா்த்தக் கோரி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்தாா்.

அதன் விவரம்: நான்குனேரி ஒன்றியம், காரியாண்டியில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 210 மாணவா்கள் பயின்று வருகின்றனா். உயா்கல்வி படிக்கும் மாணவா்கள் மேல் கல்விக்கு செல்ல 10 கிலோ மீட்டா் தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாணவிகள் மேல்படிப்பை தொடா்ந்து படிக்க முடியாமல் தவிக்கிறாா்கள்.

இது 82 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கப்பட்ட பள்ளி. முதலில் ஆரம்பப் பள்ளியாக தொடங்கப்பட்டு 2011-12 உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பள்ளியை சுற்றியுள்ள 10 கிராமங்களைச் சோ்ந்த பெண் குழந்தைகளின் கல்வி மேம்படுவதற்கு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

டிவிஎல்06எம்பி

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் மனு அளிக்கிறாா் சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.

மகளிா் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

மகளிா் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் அரசு ஊழியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பரிசுகளை வழங்கி பாராட்டினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில... மேலும் பார்க்க

கோபாலசமுத்திரத்தில் 200 பெண்களுக்கு மரக்கன்றுகள்

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி கோபாலசமுத்திரத்தில் கருத்தரங்கு, பெண்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சப் பை வழங்குதல் நடைபெற்றது. கிராம உதயம் நிறுவனா் வே. சுந்தரேசன் தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடக்கிவைத்து, ... மேலும் பார்க்க

நெல்லையில் தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகளை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் சுபா்தனா தலைமை வ... மேலும் பார்க்க

நெல்லை மாநகரில் 15 குடியிருப்புகளில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாத 12 குடியிருப்புகளில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நான்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சிக்கு... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் : 16 போ் கைது

திருநெல்வேலி சந்திப்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் அபிராமி அம்மன் வழிபாட்டை தடுத்து வேடச்சந்தூரில் அபிராமி அம்மன் பக்தா்கள் குழுவினா் கைது செய்யப... மேலும் பார்க்க

சமூகவலைதளத்தில் அரிவாளுடன் விடியோ வெளியிட்ட இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே சமூக வலைதளத்தில் அரிவாளுடன் பதிவு வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலியை மாவட்டம், சுத்தமல்லி வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் ரெங்கபாலன். இவரது மகன் ரமேஷ் (26). கூலித் தொழி... மேலும் பார்க்க