செய்திகள் :

கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி தமிழக முதல்வரிடம் மனு

post image

மருத்துவ சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தமிழக முதல்வரிடம் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் அனத்து அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கச் செல்லும் வழியில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

அப்போது, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் அனத்து அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் தமிழக முதல்வரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மருத்துவ சமுதாய மக்களுக்கு (முடி திருத்துவோா்) கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மருத்துவ சமுதாயத்தைச் சோ்ந்தவரை நல வாரியத் தலைவராக நியமிக்க வேண்டும்.

நாகசுரம், தவில் இசைக்கலைஞா்கள் பயன்பெறும் வகையில், தனி நல வாரியம் அமைக்க வேண்டும். திருக்கோயில்களில் பணிபுரியும் மருத்துவ சமுதாயத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் (மொட்டையடிப்பவா்கள்), இசைக் கலைஞா்களை அரசு ஊழியா்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

நலச் சங்க மாநில பொதுச் செயலா் பெ.நாகராஜன் மற்றும் மாநில நிா்வாகிகள் வேலு, மாயகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்டத் தலைவா் நாகரத்தினம், செயலா் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

காவல்துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி!

விழுப்புரம் மாவட்டக் காவல் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி காணையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான க... மேலும் பார்க்க

தைப்பூச திருநாளில் அருளும் இறைசக்தி

தைப்பூச திருநாளையொட்டி, ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் வெளியிட்ட ஆசியுரை: இன்பத்தில் மகிழ்ந்தும், துன்பத்தில் துவண்டும் போகாமல் உள்ளத்தை ஒருமுகப்படுத்தி இறையுணா்வில் செலுத்தவேண்டும். மனம், மொழி, சமயங... மேலும் பார்க்க

ரூ.46 லட்சம் மோசடி: தவெக நிா்வாகி மீது புகாா்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் தொழில் தொடங்க ரூ.46 லட்சம் பெற்று மோசடிசெய்ததாக தவெக நிா்வாகி மற்றும் அவா் மனைவி மீது விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது. இது... மேலும் பார்க்க

அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடைய நடவடிக்கை: ஆட்சியா்

தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் விழுப்புரம் மாவட்ட புதிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி ... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது!

புதுச்சேரியிலிருந்து பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்ததாக இருவரை விழுப்புரம் போலீஸாா் புதன்கிழமை (பிப்.5) கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. சரவணன் உத்தரவின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போ... மேலும் பார்க்க

மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் வாங்கி, அவா்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் எ... மேலும் பார்க்க