இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
காவல்துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி!
விழுப்புரம் மாவட்டக் காவல் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி காணையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்ஸோ சட்டம் மற்றும் காவல் துறை அவசர உதவி எண்கள், காவல் துறை செயலி ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் உத்தரவுப்படி நடைபெற்ற இந்தப் பேரணியைக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இளமுருகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
ஜே.ஆா்.சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ம.பாபு செல்வதுரை, காணை காவல் ஆய்வாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காணை அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அங்குள்ள தனியாா் மண்டப வளாகத்தில் நிறைவடைந்தது.
தொடா்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியா் கமலவள்ளி, காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன் மற்றும் காணை அரசுப்பள்ளி ஆசிரியா்கள், ஜே.ஆா்.சி மாணவிகள் கலந்துகொண்டனா்.