பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிப்பதில்லை: சு. திருநாவுக்கரசர்
களக்காடு அருகே விபத்து: இரு தொழிலாளிகள் காயம்
களக்காடு அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் இரு தொழிலாளிகள் காயமடைந்தனா்.
களக்காடு அருகே வடக்கு எருக்கலைப்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளிகள் ஜான் (45), பாஸ்கா் (40). இவா்கள் வெள்ளிக்கிழமை திருநெல்வேலி அருகே டக்கரம்மாள்புரத்துக்கு பைக்கில் சென்றனா். பைக்கை, ஜான் ஓட்டினாா்.
அப்போது, பைக்கின் பின்புறம் சுமை ஆட்டோ மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.