பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
களியக்காவிளை அருகே புறாக்களைத் திருடியதாக இளைஞா்கள் கைது
களியக்காவிளை அருகே 48 புறாக்களைத் திருடியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை சந்தை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அன்சாா் (43). இவா் வீட்டில் புறாக்களை வளா்த்து வருகிறாா். சில நாள்களுக்கு முன் 48 புறாக்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம். அவற்றின் மதிப்பு ரூ. 48 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை சுனாமி காலனியைச் சோ்ந்த ஜெகதீஷ் (21), தூத்தூா் பகுதியைச் சோ்ந்த சிம்சன் (28) ஆகியோரைக் கைது செய்து, புறாக்களைப் பறிமுதல் செய்தனா்.