செய்திகள் :

களியக்காவிளை: கேரளா கழிவுகளை எல்லையில் தடுத்து நிறுத்திய தமிழக போலீஸ்!

post image

திருநெல்வேலி மாவட்டத்தின் நடுக்கல்லூர், பழவூர், கொண்டா நகரம் கிராமப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால் அந்தப் பகுதி மக்களுக்கு நோய் தொற்றும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதுடன், ``கழிவுகள் கொட்டப்பட்டதற்கு கேரள அரசுதான் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். மூன்று நாள்களுக்குள் மருத்துவக் கழிவுகளைக் கேரள அரசாங்கம் அகற்ற வேண்டும்" என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கேரளா அரசுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில் கழிவுகளைத் தமிழ்நாட்டுக்குள் அனுப்பிய மருத்துவமனைகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் நெல்லையில் கொட்டப்பட்ட கழிவுகளை லாரிகளில் கேரளாவுக்கே திருப்பி அனுப்பும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. கேரளா எல்லை மாவட்டங்களில் உள்ள தமிழக போலீஸார் லஞ்சம் வாங்கிக்கொண்டு கழிவுகளை தமிழ்நாட்டுக்குள் அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கைது செய்யப்பட்ட டிரைவர்கள்

இந்த நிலையில் தமிழக - கேரள எல்லையான களியக்காவிளை உட்பட சோதனை சாவடிகளை தாண்டி கழிவு வாகனங்கள் தமிழகத்தில் நுழைந்தால் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நேற்று மூன்று கன்டெய்னர் லாரிகளில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட இறைச்சி கழிவுகள் பறிமுதல் செய்யபட்டு இரண்டு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செப்டிக் டேங்க் கிளீன் செய்யும் வாகனம்

இன்று கேரளாவில் இருந்து புழுக்களுடன் கூடிய ஹோட்டல் வேஸ்ட்களை ஏற்றி வந்த தமிழக பதிவெண் கொண்ட  கன்டெய்னர் லாரி மற்றும் செப்டிக் டேங்க் வேஸ்ட் ஏற்றி வந்த வாகனம் என இரண்டு வாகனங்களை கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். கழிவுகளுடன் வந்த இரண்டு வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். வாகனங்களை ஓட்டி வந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்ட தேவா (25) வள்ளி முருகன் (43) ஆகிய இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவறைக்குள் பேராசிரியர் மர்ம மரணம்; முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றிய நிலையில் சடலம் மீட்பு!

உ.பியைச் சேர்ந்தவர் பிரபாகர் குமார் (32). இவர் சென்னை குன்றத்தூரில் உள்ள கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் மதுரவாயலில் தங்கியிருந்தார். இவரின் குடும்பம் உ.பி-யில் உள்ளது. இ... மேலும் பார்க்க

கோவை டு பீகார்; ஐ.டி ஊழியருக்காக கடத்திவரப்பட்ட துப்பாக்கி... 3 பேர் கைது!

கோவை, சேரன்மாநகர் விளாங்குறிச்சி சாலை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (22). இவர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிஶ்ரீ (23) நண்பர்கள் ஆவர்.மணிகண்ட பிரபு... மேலும் பார்க்க

நவபாஷாண முருகர் சிலை, யானை தந்தத்தால் செய்த கிருஷ்ணர் சிலை பறிமுதல் - ஷாக் கொடுக்கும் சந்தை மதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிலைக் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.திருவண்ணாமலை அருகிலுள்ள கண்டியாங்குப்பம் கிராமத்... மேலும் பார்க்க

Digital Arrest : வீடியோ காலில் கைதுசெய்த கும்பல்; 10 நாள்களில் ரூ.1.33 கோடியை இழந்த முதிய தம்பதி!

மும்பை கோரேகாவ் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் வங்கி ஊழியர் ஒருவருக்கு, கடந்த மாதம் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்தார். போனில் பேசிய... மேலும் பார்க்க

SRK: "என் கரியரில் மிகச் சிறிய வழக்கு..." - ஆர்யன் கான் வழக்கு குறித்து சமீர் வான்கடே பேசியதென்ன?

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (Aryan Khan) போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்தபோது, அவ்வழக்கின் விசாரணையைத் தலைமை தாங்கியவர் முன்னாள் போதைப்பொருள் தடுப... மேலும் பார்க்க

சென்னை: பட்டப்பகலில் ஃபைனான்சியரை காரில் கடத்திய கும்பல்; 4 பேர் கைது; நடந்தது என்ன?

சென்னை சாலிகிராமம் பெரியார் தெருவில் வசித்து வருபவர் உதயகுமார். இவரின் தம்பி துரை ரகுபதி (30). இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 20.12.2024-ஆம் தேதி துரைரகுபதி, கோயம்பேடு காவல் நி... மேலும் பார்க்க