செய்திகள் :

கள்ளக்குறிச்சி: `ஒரு ஆபீசரை உள்ள வச்சி பூட்டிட்டு போறீயே நியாயமா?’ - VAO-வை சிறை வைத்தாரா ஊழியர்?

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே அலுவலகத்தில் சங்கீதா என்பவர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். சமீப நாட்களாக இருவருக்குள்ளும் ஏதோ பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வி.ஏ.ஓ தமிழரசி அலுவலகத்துக்குள் இருக்கும்போதே அலுவலகத்தை சங்கீதா பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா

அப்போது அலுவலகத்திற்குள் இருந்த வி.ஏ.ஓ தமிழரசி, சங்கீதா புறப்பட்டுச் செல்வதை எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வி.ஏ.ஓ தமிழரசி எடுத்த அந்த வீடியோவில், அலுவலகத்துக்கு வெளியே தனது வண்டியை நோக்கி வருகிறார் சங்கீதா. அதை ஜன்னல் வழியாக பார்த்து வீடியோ எடுக்கும் தமிழரசி, `ஆபீசை பூட்டிட்டு எங்கம்மா போற…? ஒரு ஆபீசரை உள்ள வச்சி பூட்டிட்டு போறது எந்த விதத்தில் நியாயம்மா ?

இந்த வீடியோவை தாசில்தாருக்கே அனுப்பி வச்சி, உன்மேல சிவியரா ஆக்‌ஷன் எடுக்கச் சொல்வேன்மா. தேவையில்லாத வேலையை பண்ணிக்கிட்டு இருக்கீங்க. ஆபீசை திறங்க. என்னது மூடுடி வாயையா…?’ என்று கேட்கிறார். ஆனால் இவை எதையும் கண்டுகொள்ளாத சங்கீதா, தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு நிதானமாக அங்கிருந்து செல்கிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடம் இதுகுறித்து கேட்டபோது, ``அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றதாக வி.ஏ.ஓ-வும், பூட்டவில்லை என்று உதவியாளரும் கூறுகின்றனர். அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்று முடித்துக் கொண்டார்.

'நாங்கள் எதிரிகள் அல்ல' - மகனுடன் சென்று பட்னாவிஸை சந்தித்து பேசிய உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பா.ஜ.க தலைமையில் புதிய கூட்டணி அரசு பதவியேற்று இருக்கிறது. புதிய அரசு பதவியேற்பு விழாவிற்கு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு அழைப்பு விடுக்கப்பட... மேலும் பார்க்க

அல் உம்மா இயக்க தலைவர் பாஷா மரணம்; நேரில் சென்ற சீமான்... கொந்தளிக்கும் பாஜக

1998 கோவை குண்டு வெடிப்பு சம்பத்தின் முக்கிய குற்றவாளியான பாஷா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்காக 30 ஆண்டுகளுக்கு மேல் பாஷா சிறையில் இருந்தார்.கோவை குண்டு... மேலும் பார்க்க

Annamalai: "கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்கா தமிழ்நாடு" - அண்ணாமலை காட்டம்

தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கேரளாவிலிருந்து குப்பைகள் கொண்டுவது கொட்டப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு முதல் இது தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. பல இடங்களில் குற்றச்சாட்... மேலும் பார்க்க

``தமிழக எல்லை மருத்துவக் கழிவுகளை கொட்டும் குப்பைக் கிடங்கா..?" - டிடிவி தினகரன் காட்டம்

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.இது தொடர்பாக அமுமுக-வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க