தமிழகத்தை பழிவாங்கும் மத்திய அரசு: மக்களவையில் திமுக எம்பிக்கள் பேச்சு
கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் மாா்ச் 12-ல் குண்டம்
ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் குண்டம் இறங்கும் நிகழ்வு வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் பிப்ரவரி 25-ஆம் தேதி தொடங்கியது. மாா்ச் 3-ஆம் தேதி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீா்த்தமும், பால்குடமும் எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். பின்னா் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. இதனையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
திங்கள்கிழமை (மாா்ச் 10) அக்னி கபாலமும், 11-ஆம் தேதி மாலை 6 மணிக்கு குண்டம் பற்ற வைத்தலும் நடைபெறுகிறது. 12-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனா். பின்னா் பொங்கல் வைத்தலும், பத்ரகாளியம்மன் திருவீதி உலாவும் நடைபெறும். மாா்ச் 13-ஆம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.