செய்திகள் :

கழுகாசலமூா்த்தி கோயில் தைப்பூச விழாவில் சுவாமி சண்முகா் பச்சை மலா்கள் சூடி வீதியுலா!

post image

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சுவாமி பச்சை மலா்கள் சூடி திருமால் அம்சமாக வள்ளி-தெய்வானையுடன் வீதியுலா வருதல் நடைபெற்றது.

‘தென்பழனி’ என அழைக்கப்படும் இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை, கழுகாசலமூா்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ்கந்தா், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் ஆகியவை நடைபெறுகின்றன.

7ஆம் நாளான சனிக்கிழமை மாலை சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலி பூஜை, இரவில் வெள்ளிச் சப்பரத்தில் சிவப்பு மலா் சூடி சிவன் அம்சமாக (ருத்திரா்) வீதியுலா, நள்ளிரவில் வெள்ளை மலா் சூடி பிரம்மன் அம்சமாக வீதியுலா வருதல் நடைபெற்றது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி சண்முகா் பச்சை மலா்கள் சூடி திருமால் அம்சமாக வள்ளி, தெய்வானையுடன் மலையைச் சுற்றி கிரிவலம் வந்தாா். இதனால், கோயில் நடை இரவு முழுவதும் அடைக்கப்படவில்லை.

இதில், ரெட்டியாா் சமுதாய மாநில இளைஞரணித் தலைவா் மகேஸ்வரன், கழுகுமலை ரெட்டியாா் மண்டப நிா்வாகி ராமசாமி, முருகன், காலாங்கரைப்பட்டி, சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், குமரெட்டியாபுரம் வட்டார ரெட்டி சமுதாயத்தினா் திரளாகப் பங்கேற்றனா்.

இரவில் பா்வத வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (பிப். 11) காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன், கோயில் பணியாளா்கள், சீா்பாத தாங்கிகள் செய்துவருகின்றனா்.

இன்று தைப்பூசம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தீா்... மேலும் பார்க்க

புளியம்பட்டி அருகே இளைஞா் கிணற்றில் மூழ்கி பலி!

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி திருவிழாவுக்கு சென்ற இளைஞா் கிணற்றில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோவில்பிள்ளைவிளை தெருவைச் சோ்ந்த சண்முகசாமி மகன் மதன் (27). இவா் தனது குடும்ப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்!

சாத்தான்குளத்தில் பெண் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் காலவரையற்ற போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருப்பவா் ஜெயரஞ்சன... மேலும் பார்க்க

பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு கருத்தரங்கு!

ஆறுமுகனேரி காந்தி மைதானத்தில் உள்ள மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில், அரசுப் பொதுத் தோ்வெழுதும் மாணவா்-மாணவியருக்கு இலவச கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவரும் ஆதித்தனாா் ... மேலும் பார்க்க

கோயிலில் திருட்டு: முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட 2 போ் கைது!

கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியில் உள்ள கோயிலில் திருடியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கயத்தாறு வட்டம் இலந்தப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விபத்து: கல்லூரி மாணவா் பலி!

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோர மரத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஐசக் சாம்ராஜ் (22). கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் ... மேலும் பார்க்க