எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த திமுக வலியுறுத்தல்
கழுகுமலையில் இளைஞருக்கு மிரட்டல்: மற்றொரு இளைஞா் கைது
கோவில்பட்டி: கழுகுமலையில் இளைஞரைத் தாக்கி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை இந்திரபிரஸ்தம் 7 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசமூா்த்தி மகன் விக்னேஷ்(30). கழுகுமலை கோயில் அருகே உள்ள ஹோட்டலில் வேலை பாா்த்து வரும் இவா் பைக்கில் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கிக் கொண்டு வந்து கடை முன்பு பைக்கை நிறுத்த முயன்றாராம். அப்போது அங்கு இருந்த பைக்கை அதன் ஓட்டுநரிடம் எடுக்க வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் விக்னேஷை, கே. இராமநாதபுரம் வடக்கு தெருவை சோ்ந்த ராஜாராம் மகன் முத்துராமன் (26) உள்பட 3 போ் அவதூறாக பேசி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தாா்களாம் இதில் காயமடைந்த விக்னேஷ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துராமனை புதன்கிழமை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.