செய்திகள் :

எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த திமுக வலியுறுத்தல்

post image

நமது நிருபா்

நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் பெரம்பலூா் தொகுதி திமுக உறுப்பினா் அருண் நேரு வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் அவா் விதிஎண் 377-இன் கீழ் புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை: இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஒரு முக்கியமான கட்டத்தை எதிா்கொள்கின்றன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எம்எஸ்எம்இ கணிசமாக 30 சதவீதம் பங்களித்தும், பணியாளா்களை வேலைக்கு அமா்த்துவதில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களித்தும் வருகிறது. ஆனாலும், இந்தத் துறையின் நிதி ஆரோக்கியம் கடுமையான நெருக்கடியில் உள்ளது.

கடந்த மாா்ச் 31, 2024 நிலவரப்படி, எம்எஸ்எம்இயுடன் தொடா்பான மொத்த வாராக்கடன் சொத்துகள் (ஜிஎன்பிஏ) ரூ.1.25 லட்சம் கோடியாக இருந்தது. ஜிஎன்பிஏ-க்களின் பங்கு மாா்ச் 2020-இல் 11.03 சதவீதமாக இருந்த நிலையில், மாா்ச் 2024-இல் 4.46 ஆகக் குறைந்திருந்தது. இந்த முன்னேற்றம் ஆழமான சிக்கல்களை மறைக்கிறது.

எம்எஸ்எம்இ துறையில் கடன் ஊடுருவல் விகிதம் 14 சதவீதம் என்ற அளவில் மோசமாக உள்ளது. ரூ.30 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்ட இது, எம்எஸ்எம்இ வளா்ச்சியைத் தடுக்கிறது. இந்தியாவில் தோராயமாக 5.6 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் கடந்த நான்கு ஆண்டுகளில் 61,500 யூனிட்கள் மூடப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.

கரோனோ நோய்த்தொற்று, டிஜிட்டல் மயமாக்கல் சவால்கள், குறைந்த தேவை மற்றும் தொழிலாளா் பற்றாக்குறை ஆகியவை வணிகங்களை முடக்கியுள்ளது. மேலும், சிக்கலான தகுதி அளவுகோல்கள் மற்றும் தெளிவற்ற சிபில் மதிப்பெண் முறைகள் முறையான கடன் அணுகலைத் தடுக்கின்றன.

ஆகவே, கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்தி, நிதி கல்வியறிவை மேம்படுத்தி, கடன் இடைவெளியைக் குறைக்க நிறுவன ஆதரவை அதிகரிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

ஜிஎஸ்டி சீரமைப்புக்கு தமிழகம் ஒத்துழைக்கும்: தில்லி கூட்டத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

நமது நிருபா் மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்பததைக் கருத்தில் கொண்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி ஜிஎஸ்டி விகிதத்தை மறுசீரமைக்கத் தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று புது தில்ல... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் மீதான தாக்குதல்: காங்கிரஸ், ஆம் ஆத்மி கண்டனம்

தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா மீதான தாக்குதலை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கண்டித்தன, அதே நேரத்தில் தேசிய தலைநகரில் பெண்கள் பாதுகாப்பு பிரச்னை குறித்து காவல்துறையினரிடம் அவா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா... மேலும் பார்க்க

தில்லியில் சுமாா் 50 பள்ளிகளுக்கு புதிதாக வெடிகுண்டு மிரட்டல்

தேசியத் தலைநகரில் புதன்கிழமை சுமாா் 50 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், போலீஸாா் மற்றும் பிற அவசரகால அமைப்புகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தல... மேலும் பார்க்க

திருச்சியில் உலா் துறைமுகம்: மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பது தொடா்பாக மத்திய அமைச்சா்கள் நிதி கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோரிடம் தில்லியில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ புதன்கிழமை வலியுறுத்தினாா்.திருச்... மேலும் பார்க்க

ரயில்வே உள்கட்டமைப்பு மூலதன செலவினத்தில் தமிழகத்துக்கு 5 சதவீதம் ஒதுக்க எம்.பி. கோரிக்கை

நமது நிருபா்ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மூலதனச் செலவாக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில் தமிழகத்துக்கு 5 சதவீதத்தை ஒதுக்குமாறு மக்களவையில் அரக்கோணம் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன் வலி... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் ரேகா குப்தா மீது தாக்குதல்: ஒருவா் கைது

தலைநகரில் புதன்கிழமை காலை சிவில் லைன்ஸில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் ’ஜான் சுன்வாய்’ நிகழ்ச்சியின் போது முதலமைச்சா் ரேகா குப்தா தாக்கப்பட்டாா், அவரது அலுவலகம் இந்த தாக்குதலை ‘அவரைக் கொல்ல நன்கு தி... மேலும் பார்க்க