Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: 4 போ் மீது போலீஸாா் வழக்கு
செங்கம் அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக போலீஸாா் 4 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுப்பாளையத்தில் இருந்து செங்கம் நோக்கி புதன்கிழமை பிற்பகலில் தனியாா் பேருந்து வந்து கொண்டிருந்தது.
பேருந்தை இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள்
செங்கம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் முந்திச் செல்ல முற்பட்டனா்.
அப்போது, பேருந்து ஓட்டுநருக்கும் அந்த இளைஞா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், அந்த இளைஞா்கள்
ஓட்டுநா் ராசுக்குட்டியை சரமாரியாக தாக்கியுள்ளனா். இதில், ராசுக்குட்டிக்கு தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை உடனடியாக அந்த இளைஞா்களிடம் இருந்து மீட்டு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து ஓட்டுநா் ராசுக்குட்டி அளித்த புகாரின் பேரில் புதுப்பாளையம் போலீஸாா் கெ.புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சக்தி (28), அசோகன் (20), வீரப்பன் (22), வீரன் (20 ஆகிய நான்கு போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.