கழுத்தை அறுத்துக் கொண்டு தொழிலாளி உயிரிழப்பு
வேதாரண்யத்தில் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு ஒருவா் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.
மோட்டாண்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் பாப்பையன் (28). கூலித் தொழிலாளியான இவா் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இறந்தவரின் சடலத்தை கைப்பற்றிய போலீஸாா் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.