பாரதிராஜா: `கம்பீரம் குறையாம, நிறைவான நினைவுகளோடு இருக்கிறார்’ - நேரில் சந்தித்...
கவிஞர் சினேகனின் 101 வயது தந்தை காலமானார்; துயரத் தகவலைப் பகிர்ந்த சினேகன்
தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமாகியுள்ளார்.
101 வயதாகும் இவர் தஞ்சாவூரில் உள்ள காரியாபட்டியிலிருந்து வந்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சினேகன், "நட்புக்குரிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் /அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம்.
எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்குக் காலமாகி விட்டார் என்ற துயர தகவலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.



















