செய்திகள் :

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தைக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்

post image

கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி கோரியிருந்த நிலையில், ஆக. 13ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கடந்த ஜூலை 27-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.

வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துவந்ததால், காதலியின் சகோதரர் சுர்ஜித், கவினை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். பின்னர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோருக்கு இந்த கொலையில் சம்மதம் இருப்பதாக புகார் தெரிவித்த கவினின் பெற்றோர், அவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து, சுர்ஜித்தின் பெற்றோரை இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கையில் காவல் துறையினர் சேர்த்தனர். வழக்கின் விசாரணை காரணமாக அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. வழக்கில் விரிவான விசாரணைக்காக சுர்ஜித் மற்றும் அவரின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனுவின் மீதான விசாரணையில் ஆக. 13ஆம் தேதி வரை சுர்ஜித்தையும் அவரின் தந்தை சரவணனையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிக்க |பாலியல் வன்கொடுமை: கராத்தே பயிற்சியாளர் குற்றவாளி எனத் தீர்ப்பு!

Kavin murder case: Surjith, father remanded in 2-day CBCID custody

சுதந்திர நாள் விடுமுறை: கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சுதந்திர நாளையொட்டி தொடர் விடுமுறை வருவதால், வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஆக. 15 முதல் சுதந்திர நாள் மற்றும் அதற்கு அடுத்த இரு நாள்களும் வார இறுதி நாள் என்பதால... மேலும் பார்க்க

முதல்வர் மு. க. ஸ்டாலின் - மகாராஷ்டிர ஆளுநர் சந்திப்பு!

சென்னை: தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் மகாராஷ்டிர ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்தார். சென்னையில் முதல்வரை முகாம் அலுவலகத்தில் இன்று(ஆக. 11) சந்தித்து சி. பி. ராதாகிருஷ்ணன் பேசினார். அரச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு தவெக துணை நிற்கும்!

சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணிகள் தனியாருக்கு தாரை வார்த்து, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.கரோனா போன்ற ... மேலும் பார்க்க

மதுரை தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி!

மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல் துறை பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: கராத்தே பயிற்சியாளர் குற்றவாளி எனத் தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடந்தவர் கெபிராஜ். இவர் தனியார் பள்ளியில் பணி... மேலும் பார்க்க

விஜய் - தூய்மைப் பணியாளர்கள் சந்திப்பு நிறைவு!

பனையூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உடனான தூய்மைப் பணியாளர்களின் சந்திப்பு நிறைவு பெற்றது. 11வது நாளாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், தவெக அலுவலகத்த... மேலும் பார்க்க