செய்திகள் :

கஷ்டங்கள் எதுவானாலும் காக்கும் பெருங்களத்தூர் காமாட்சி அம்மன்; திருவிளக்கு பூஜை

post image

2025 மே -16ம் தேதி சென்னை புது பெருங்களத்தூர் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக...

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

பெருங்களத்தூர் பகுதி சென்னையின் நுழைவு வாயில் என்றே அறியப்படுகிறது. வயல் வெளிகள் சூழ்ந்த காரணத்தால் இப்பகுதி பெரும் களத்தூர் எனப்பட்டது. அங்கே மிகப் பழைமையான காலம்தொட்டே அமர்ந்து ஆட்சி செய்து வருகிறாள் ஸ்ரீகாமாட்சி அம்மன். இப்பகுதியின் எல்லை தெய்வமாக இருந்து காவல் புரிந்தவள் இந்த அன்னை. இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகள் தீர்க்கும் அற்புத ஆலயமாக இது விளங்கி வருகிறது.

தவக்கோலத்தில் பாசாங்குசமும் கரும்பு வில்லும் ஏந்தி பத்மாசனத்தில் வீற்றிருக்கும் இந்த அன்னையைக் கண்டாலே கவலைகள் பறக்கும்; காரியங்கள் நிறைவேறும் என்கிறார்கள் பக்தர்கள். இங்கு வந்து காமாட்சியை தரிசித்து வேண்டிக்கொண்டால் படிப்புக்கேற்ற வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு அனைத்தும் கிடைக்கும் என்கிறார்கள். மேலும் தொழில்-வியாபார விருத்தி அளிக்கும் ஆலயமும் இது. திருமணம் வரம் அருளும் தேவியும் இவள் என்கிறார்கள். மாங்கல்ய பலமும் நோய் தீர்க்கும் மருத்துவமும் அளிப்பவள் காமாட்சி என்று பெண்கள் இவளைப் போற்றுகிறார்கள்.

வேண்டியதை வேண்டியவாறே அருளும் இந்த அன்னையை திருவிளக்கேற்றி வழிபாடு செய்கிறபோது சகல நன்மைகளும் உண்டாகும். 'கவலைகள் தீரும்' 'திருமண வேண்டுதல்கள் பலிக்கும்; காமாட்சியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்' என்கிறார்கள் பக்தர்கள்.

விளக்கு பூஜை

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

தீர்த்தவாரித் திருவிழா: முக்கோடி தேவதைகள் தீர்த்தமாடி, முன்னை வினை தீர்த்த திருக்கோடிக்கா!

முக்கோடித் தேவதைகள் தீர்த்தமாடி முன்னை வினை தீர்த்த திருக்கோடிக்கா! தீர்த்தவாரித் திருவிழா மற்றும் ரிஷபவாகனக் காட்சி சித்திரை 27, சனிக்கிழமை - 10.05.2025 திருக்கோடிக்காபொதுவாக திருத்தலங்களைத் தரிசிக்க... மேலும் பார்க்க

சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு; 2 நாள்கள் ஆன்லைன் முன்பதிவு ரத்து!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காக தமிழ் மாதம் 1-ம் தேதி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். அப்போது பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.வைகாசி மாதத்திற்கான மாதாந்த... மேலும் பார்க்க

பங்குனி உத்திர திருவிழா: `மாணவர்கள் உள்பட 56 பேர் மீது வழக்கு' - அதிருப்தியில் 18 கிராம மக்கள்!

தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு கோவிலுர் கிராமம். 18 கிராமங்களுக்கு தலைகிராமமான இந்த ஊரில் அமைந்துள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழ... மேலும் பார்க்க

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: நீண்ட ஆயுளும் நிறைவான ஆரோக்கியமும் நீங்காத செல்வமும் பெற சங்கல்பியுங்கள்

26-5-2025 திங்கள்கிழமை நிறைந்த அமாவாசை நன்னாளில் இங்கு பிரமாண்ட மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. உங்கள் தோஷங்கள், பாவங்கள், சாபங்கள், அச்சங்கள் யாவையும் வெல்ல இந்த ஹோமத்தில் கலந... மேலும் பார்க்க

அஷ்ட லட்சுமியரும் சிவபூஜை செய்த தேரழுந்தூர் கோயில்; போனால் விருப்பங்கள் யாவும் நிறைவேறும்

தேரழுந்தூர் சிவாலய மஹா கும்பாபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 04.05.2025 - ஞாயிறு அன்று நிகழ்த்தப்பெற உள்ளது. அதையொட்டி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை சடங்குகள் முதலான நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிரு... மேலும் பார்க்க

காஞ்சி சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதியாக சுப்பிரமணிய கணேச சர்மா திராவிட் நியமனம்!

பழம்பெருமை மிக்க காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது இளைய பீடாதிபதியாக, சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். காஞ்சிபுரம... மேலும் பார்க்க