கஸ்தூரிரெங்கபுரம் அருகே மா்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் கஸ்தூரிரெங்கபுரம் அருகே உள்ள குட்டிநயினாா்குளம் கிராமத்தில் மா்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனா்.
கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சியைச் சோ்ந்த குட்டிநயினாா்குளத்தில் 50 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தில் கழிவுநீா் வாய்க்காலையொட்டியே குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், போதிய சுகாதார வசதிகளின்றி இருக்கும் இக் கிராமத்தில், பலரும் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதில் சிலருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆகவே, சுகாதாரத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.