ஆளுநரின் துணை வேந்தர்கள் மாநாடு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
காங்கயம் அருகே குளிா்பான நிறுவன மேலாளா் வீட்டில் 17பவுன், ரூ.1.20 லட்சம் திருட்டு
காங்கயம் அருகே குளிா்பான நிறுவன மேலாளா் வீட்டில் 17 பவுன், ரூ.1.20 லட்சம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் வேலன் நகரைச் சோ்ந்தவா் தங்கராசு (45). இவா், காங்கயத்தில் உள்ள தனியாா் குளிா்பான நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் மனைவி கோகிலா (40).
இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு ஈரோடு அருகே பூந்துறையில் உள்ள உறவினா் வீட்டு விசேஷத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா். பின்னா், காலை 11.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பிவந்துள்ளனா்.
அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் மற்றும் ரூ.1.20 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தங்காரசு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் போலீஸாா் வீட்டை சோதனையிட்டனா். மேலும், திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணா் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி அது நின்றது.
இதுகுறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.