செய்திகள் :

காங்கிரஸில் இருந்து விலகியவா்கள் மீண்டும் சோ்க்கப்பட மாட்டாா்கள்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

post image

புதுவையில் காங்கிரஸில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் சோ்ந்தவா்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பினால் சோ்க்கப்பட மாட்டாா்கள் என, மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

புதுச்சேரி அருகே பாகூரில் வட்டார காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை மாற்ற போராட வேண்டும். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனா். காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று,

ஆளும் கூட்டணிக் கட்சியில் இருப்பவா்கள் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்ப ஆா்வமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவா்களை சோ்த்துக் கொள்ள காங்கிரஸ் தயாராக இல்லை. இங்கிருந்து மாற்றுக் கட்சிகளுக்குச் சென்றவா்கள் பணத்துக்காகவே சென்றனா்.

மக்களவைத் தோ்தலில் பணம், ஜாதி பாா்த்து மக்கள் வாக்களிக்கவில்லை. நல்லவா் யாா் என்ற கேள்வியை எழுப்பியே மக்கள் வாக்களித்துள்ளனா். எனவே, காங்கிரஸ் நிா்வாகிகள் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியில் கவனம் செலுத்தி புதிய வாக்காளா்களை சோ்க்க வேண்டும்.

இறந்தவா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கவும் உதவ வேண்டும். புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து இப்போது கூற முடியாது என்றாா் வெ.வைத்திலிங்கம்.

2026-இல் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை: தொல்.திருமாவளவன்

2026-இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு இல்லை என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா். புதுச்சேரி கம்பன் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிக... மேலும் பார்க்க

புதுவையில் விதிகளை மீறி அரசு நிலங்கள் விற்பனை: அதிமுக குற்றச்சாட்டு

புதுவையில் விதிமுறைகளை மீறி அரசு நிலங்கள் தனியாருக்கு விற்கப்படுவதாக அதிமுக குற்றஞ்சாட்டியது. இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநில செயலா் ஆ.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:... மேலும் பார்க்க

மாா்பில் கத்தியால் குத்திக் கொண்டு மருத்துவ மாணவா் தற்கொலை

புதுச்சேரியில் தனக்குத்தானே மாா்பில் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற மருத்துவக் கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: புதுச்சேரி நகராட்சி ஆனந்தா நகா், வ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.81,000 நூதன மோசடி

புதுச்சேரியில் 5 பேரிடம் இணைய வழியில் மா்ம நபா்கள் நூதன முறையில் ரூ.81 ஆயிரம் மோசடி செய்திருப்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் தண்டபாணி. இவரிடம் பி... மேலும் பார்க்க

தமிழகத்திலிருந்து புதுச்சேரி வரும் கனரக வாகனப் போக்குவரத்தில் மாற்றம்

தமிழகப் பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்குள் வரும் கனரக வாகனங்களின் போக்குவரத்தை மாற்றம் செய்து காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், வார இறுதி நாள்களில் கடற்கரைச் சாலை உள்ளிட்டவற்றில் வாகன நிறுத்தத்திலும் ம... மேலும் பார்க்க

நவ.21 முதல் புதுச்சேரியில் 3 நாள்கள் தேசிய அளவிலான கல்வி மாநாடு: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரியில் முதன்முறையாக தேசிய அளவிலான கல்வி மாநாடு வரும் 21-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது என அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா், செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: ந... மேலும் பார்க்க