செய்திகள் :

காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்படும் மன்மோகன் சிங் உடல்!

post image

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல், மக்கள் அஞ்சலிக்காக சனிக்கிழமை வைக்கப்படவுள்ளது.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார்.

தற்போது தில்லி இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிக்க : மன்மோகன் சிங் மறைவு: தில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

வெளிநாட்டில் உள்ள மன்மோகன் சிங்கின் மகள், தில்லிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகவும், அவரிடம் ஆலோசித்த பிறகு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் உடல் வைப்பது முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை மன்மோகன் சிங் உடல் வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தில்லி ராஜ பாதை அருகே முன்னாள் பிரதமர்களின் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அனைவரும் மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்: மசூதியில் அடைக்கலம் கொடுத்த காஷ்மீர் மக்கள்!

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளுக்கு அங்குள்ள மக்கள் மசூதிகளிலும் வீடுகளிலும் அடைக்கலம் கொடுத்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் உள்ள சோனமர்க் பகுதிக்கு சுற்றுலா சென்ற பஞ்சா... மேலும் பார்க்க

2024-ல் உருவான தலைவர்! இந்திரா காந்தியை ஈடுசெய்வாரா?

1999 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் தன் தாய் சோனியா காந்திக்கான பிரசாரத்தின் மூலமாக அரசியல் பயணத்தைத் தொடங்கிய பிரியங்கா காந்தி, மிகவும் தாமதமாகவே 2024 ஆம் ஆண்டில் இந்திய அரசியலில் ஒரு முக்கிய தலைவராக உரு... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: முதல் பட்டியலை வெளியிட்ட தேசியவாத காங்கிரஸ்!

நடைபெறவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலைத் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி) சனிக்கிழமை வெளியிட்டது.தில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ... மேலும் பார்க்க

மன்மோகனின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் செய்வது சரியல்ல: மாயாவதி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் மற்றும் இறுதிச் சடங்குகள் தொடர்பான அரசியலுக்குப் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில், நாட்டின் ம... மேலும் பார்க்க

விடைபெற்றார் மன்மோகன் சிங்! 21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. ... மேலும் பார்க்க

ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கிற்கு இறுதிச்சடங்கு!

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு ராணுவ மரியாதையுடன் நடைபெற்று வருகிறது. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு... மேலும் பார்க்க