பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான கோதுமை உள்ளது: உணவுச் செயலா்
காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: கைது செய்யப்பட்டவர் காதலனா?
ஹரியாணா மாநிலத்தில், காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காதல் விவகாரம் பின்னணியாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த வழக்கில், சச்சின் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால் அது உண்மையா என்று காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
ஹரியாணா மாநிலம் ரோதக் மாவட்டத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸில் ஹிமானி நர்வால் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கழுத்தில் வெட்டுக் காயத்துடன் இருந்த அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.