இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
``காசு கேட்டு வந்தவர் என்னை பார்த்ததும் டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டார்!'' - நெகிழும் பிரபு தேவா
பிரபு தேவாவின் டான்ஸ் கான்சர்ட் அடுத்த மாதம் 22-ம் தேதி சென்னை `ஒய்.எம்.சி.ஏ' மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி கடந்த வாரம் சனிக்கிழமை பிரபு தேவா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். நிகழ்வு முடிந்ததும் பிரபு தேவாவை சந்தித்து அவரின் டான்ஸ் பக்கம் குறித்து ஒரு குட்டி சாட் போட்டோம்.
கோரியோகிராபியில் பல வருஷமா நீங்க இருக்கீங்க. தொடக்கத்திலிருந்து இப்போ வரைக்கும் ரொம்ப கிரியேட்டிவான வேலைகள் பண்றது உங்களால எப்படி முடியுது? அந்தப் புத்துணர்வு குறையாம வச்சுக்கிறதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?
முதன் முதலில் நான் கோரியோகிராபி பக்கம் வந்தப்போ இருந்த பயம், ஆர்வம் இன்னும் எனக்கு இருக்கிறதுனால அந்த புத்துணர்வை என்னால தக்க வச்சுக்க முடியுது. என்னுடைய டான்ஸ் உலகமே வேற. அதுக்குள்ள இருக்கிறதுனால எனக்கு அந்த ஆர்வம் குறையாமல் இருந்துட்டே இருக்குன்னு சொல்லுவேன்.
வெஸ்டர்ன் மற்றும் கிளாசிகல் டான்ஸ் கலந்து கோரியோகிராபி பண்றப்போ எந்த மாதிரியான அவுட்புட் தரணும்னு நீங்க நினைப்பீங்க?
நான் தொடக்கத்தில் பரதநாட்டிய டான்சர் தான். பாடல் கேட்டு முடிச்சுட்டு வெஸ்டர்ன் மற்றும் கிளாசிகல் சேர்த்து பண்ணனும்னு பண்ண மாட்டேன். அது எனக்குள்ள தானாகவே உருவாகி இருக்கிறதுனால அது நல்லா வரும். அது எனக்குள்ள இருக்குற ஒரு தனித்தன்மைனு சொல்லிக்கலாம்.
ஒரு ‘ஃபேன் மொமென்டாக’ நீங்கள் வியப்படைந்த தருணம்?
மைக்கேல் ஜாக்சனை பார்த்தது மட்டும்தான். வேற எதுவுமே இல்லை.
உங்களோட ரசிகர்கள் கிட்ட இருந்து கிடைத்த தருணங்கள்ல மறக்க முடியாத தருணம்?
நிறைய நிகழ்வுகள் இருக்கு. ஆனா அதுல ஒன்னு சொல்றேன். பாம்பேல நானும் எனது நண்பரும் கார்ல போயிட்டு இருக்கும்போது ஒரு கை ஒரு கால் இல்லாத ஒருத்தர் காசு கேட்டு வந்தார். என்னை பார்த்ததும் எல்லாத்தையும் போட்டுட்டு டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டாரு. அவ்வளவு சந்தோஷம் அவருக்கு என்னை பார்த்ததுல. பக்கத்துல இருந்த என் நண்பர் `இதைவிட உனக்கு என்ன வேணும்'னு கேட்டார். அதெல்லாம் நெகிழ்ச்சியான மொமென்ட்ஸ்.