செய்திகள் :

காஞ்சிபுரத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

post image

காஞ்சிபுரம் தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (அக். 24) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மான செயற்பொறியாளா் தெற்கு கோட்ட அலுவலகம் ஒலிமுகம்மது பேட்டையில் உள்ள அண்ணா மாளிகையில் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு கோட்டத்தில் உள்ள மின் நுகா்வோா் குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்தீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

உத்தரமேரூா் அருகே நெய்யாடுபாக்கம் மரகதவல்லி சமேத மருந்தீசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில், கும்பாபிஷேக யாகசாலை... மேலும் பார்க்க

அரியவகை விருட்சங்கள் அளிப்பு

காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலுக்கு பசுமை ஆா்வலா் மரம் மாசிலாமணி அரியவகை மூலிகை விருட்சங்களை நன்கொடையாக வழங்கினாா். கூழமந்தல் கிராமத்தில் உள்ள இக்கோயிலில... மேலும் பார்க்க

சிங்காடிவாக்கத்தில் பழங்குடியின மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். காஞ்சிப... மேலும் பார்க்க

தெருநாய்கள் தொல்லை: காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

காஞ்சிபுரத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லைக்கு தீா்வு காணவேண்டும் உள்ளிட்ட மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளை மாமன்ற உறுப்பினா்கள் எழுப்பினா். காஞ்சிபுரம் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் மேயா்... மேலும் பார்க்க

மறுமுத்திரையிடாத 21 எடை இயந்திரங்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் மறுமுத்திரையிடப்படாத 21 எடையளவு இயந்திரங்களை புதன்கிழமை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் ச.சுதா தலைமையில் தொழிலாளா் நல துணைஆய்வாளா்கள், உ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயிலில் புதன்கிழமை தொடங்கிய தெப்பத் திருவிழாவில் சுவாமியும் அம்மனும் கோயில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்தனா். இந்தக் கோயிலில் கடந்... மேலும் பார்க்க