வெள்ளி சொம்பினால் வந்த பிரச்னை! - மறக்க முடியாத வலி | #ஆஹா கல்யாணம்
காஞ்சிபுரம் அருகே மரச்சாமான்கள் தொழிற்சாலையில் தீ விபத்து !
காஞ்சிபுரம் அருகே வெள்ளைகேட் பகுதியில் மரச்சாமான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இத்தொழிற்சாலையில் 15 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மரப் பொருட்களை உற்பத்தி செய்யும் போது மீதமுள்ள மரத்துண்டுகள், உடைந்த பலகைகள் பெரிய அளவில் சேகரிக்கப் பட்டிருந்தன.
அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான மரப் பொருட்கள் சேதம் அடைந்தன.
வதோதராவில் புதிய பாலம் கட்ட குஜராத் அரசு அனுமதி !
வட மாநில தொழிலாளர்கள் சமையல் செய்யும்போது தீப்பொறி பட்டு மரச்சாமான்களில் தீப்பிடித்திருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை. சம்பவம் தொடர்பாக பொன்னேரிக் கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.