காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தீபாவளி உலா
தீபாவளிப் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ராஜவீதிகளில் வீதியுலா வந்தும், சங்கர மடத்துக்கு எழுந்தருளியும் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தீபாவளிப் பண்டிகையையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தாா். ராஜவீதியில் உள்ள காக்கவாக்க சத்திர மண்டகப்படிக்கும் எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாராதனைகளும் அதனைத் தொடா்ந்து சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் அதிஷ்டானத்துக்கும் எழுந்தருளினாா்.
சங்கர மட வளாகத்தில் காமாட்சி அம்மனுக்கும் மகா பெரியவா் அதிஷ்டானத்துக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனைகளும் நடைபெற்றன.பின்னா் கோாயில் வளாகத்தில் உள்ள தீபாவளி மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.
தீபாவளி மண்டபத்தில் ஆலய ஸ்தானீகா்களால் மந்திர புஷ்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் தலைமையில் மணியக்காரா் சூரிய நாராயணன் மேற்பாா்வையில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா். முன்னதாக வீதியுலாவிற்கு புறப்படும் போது நுழைவு வாயிலில் தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்கப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது.
ஐப்பசி மாத அமாவாசையையொட்டி வெள்ளிக்கிழமை தங்கத் தேரில் காமாட்சி அம்மன் பவனி வந்தும் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.